Advertisment

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஆர்.கே சுரேஷின் 'ஒயிட் ரோஸ்'

rk suresh next movie based on true story

Advertisment

'விசித்திரன்' படத்தை தொடர்ந்து நடிகரும்தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் 'ஒயிட் ரோஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராஜசேகர் இப்படத்தை இயக்க, கயல் ஆனந்தி கதாநாயகியாகநடிக்கிறார்.இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் தமிழக காவல்துறை உயர் அதிகாரி எஸ்.ஆர் ஜாங்கிட் நடிக்கவுள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல் எழுத, ஜோஹன் ஷிவானேஷ் இசையமைக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் ரூஸோவுடன்இணைந்து ஆர்.கே சுரேஷ் தயாரிக்கவும்செய்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’திரைப்படம் உருவாகவுள்ளது" என்றார்.

rk suresh
இதையும் படியுங்கள்
Subscribe