/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/19_84.jpg)
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் 'காடுவெட்டி' படத்தில் நடித்து வருகிறார். சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுபாஷ்சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாதிக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பொங்கலை முன்னிட்டு படத்தின் முதல் பாடலாக ‘வீர பரம்பரடா...’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் கலந்து கொண்டார். ட்ரைலரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 15 ஆம்தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாவீரன் தர்பார் ??? #kaduveety from #march15th . pic.twitter.com/mjfrJ0Juku
— RK SURESH (@studio9_suresh) March 6, 2024
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)