Skip to main content

பாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான படம் ஜோசப். மேலும் இந்த படத்தில் ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 

bala j

 

 

இந்த படம் கேரளாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் ரீமேக் உரிமையை தயரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கைப்பற்றினார். வர்மா சர்ச்சைக்குப் பின்னர் இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

ஜோசப் தமிழ் ரீமேக்கில் நாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடிக்கிறார். மலையாளத்தில் அந்த படத்தை இயக்கிய பத்மகுமார்தான் இதையும் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த படத்தில் நடிப்பதற்காக ஆர்.கே. சுரேஷ் உடல் எடையை கூட்டியுள்ளார். ஏற்கனவே 73 கிலோ எடையில் இருந்த ஆர்.கே. சுரேஷ் 95 கிலோ எடைக்கு உருமாறியுள்ளார். இந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார்வையற்ற சிறுவனுக்கு பண உதவியளித்த பாலா

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
kpy bala and lawrence master helped operation for child

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வந்த மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். பின்பு தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்திற்கு ஆம்புலன்ஸ், பின்பு மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் என வழங்கினார். சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார். 

இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இனைந்து திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரும் இணைந்து கணவரை இழந்த பெண்மணிக்கு ஆட்டோ வாங்கி பரிசாக கொடுத்துள்ளனர். இப்பொழுது பார்வை இழந்த சிறுவன் ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பணம் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக பாலா வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “மாதேஸ்வரன் என்ற சிறுவன் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் கண்பார்வையை இழந்துவிட்டான். 

அவருடைய அப்பா ராஜமாணிக்கம் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு பணம் வைத்திருக்கவில்லை. மருத்துவர்களும் பணம் இருந்தால் அச்சிறுவனுக்கு பார்வை கொண்டு வந்துவிடலாம் என கூறியுள்ளனர். அது என்னை பாதித்து விட்டது. அதனால் நானும் என்னுடைய ரோல் மாடல் லாரன்ஸ் மாஸ்டரும் இணைந்து அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஆளுக்கு சரி பாதியாக கொடுத்து உதவினோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகும்  ‘ஒயிட்ரோஸ்’

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 White rose movie - kayal anandhi

கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித் நடித்துள்ள திரைப்படம் “ஒயிட் ரோஸ்”. இத்திரைப்படத்தின் டிரைலர் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு பாடலான “I’ve Arrived நானே வந்தேன்” எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்பாடலை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு “பவர்ஃபுல் சாங்” என பாடலை பாராட்டி நெகிழ்ந்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பர்மா,என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி  படங்களுக்கு இசையமைத்த சுதர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.