நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு வெளியான 'தம்பிக்கோட்டை' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு, 'மருது', 'ஸ்கெட்ச்', 'பில்லா பாண்டி', 'நம்ம வீட்டு பிள்ளை', 'புலிக்குத்தி பாண்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ், கடந்த ஆண்டு மது என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ் - மது தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆர்.கே.சுரேஷ், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷிற்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.