/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1200px-Mr._R.K._Suresh.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். மேலும் ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் எஸ்.பி.பி குணமாக வேண்டி நடிகர் ஆர்.கே. சுரேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்..."மக்களின் உயிரிலும் உணர்விலும் இசையெனும் தேனுதிரத்தை கலந்த தெய்வீக காந்தக் குரல் இசை மன்னர் திரு.எஸ்.பி.பி சார் அவர்கள் விரைவில் குணமடைந்து, மீண்டெழ இறைவனைபிராத்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)