/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_35.jpg)
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள ’ஜோதி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் ரவிமரியா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில், படத்தில் இடம்பெற்றுள்ள அன்பின் வழி, ஆரிராரோ, போவதெங்கே, ருத்ரம் ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.கே. செல்வமணி, “என்னை முதலில் அழைத்தபோது சுமாரான படமாக இருக்கும் என்று நினைத்தேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் இது பெரிய படம் என்று தெரிந்தது. படத்தின் இசை வெளியீடு மிக பிரம்மாண்டமாக இந்த மாலில் நடைபெறுகிறது. இதுவே இந்த படத்தை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டுபோகும். இதற்கு கொடுத்த ஆதரவு போன்று இப்படம் வெளியீட்டின் போதும் மக்கள் கொடுக்க வேண்டும். மாஸ் ஹீரோ படங்களை ஆதரிப்பது போன்று இதுபோன்ற சிறந்த கதை அம்சங்களை கொண்ட படங்களையும் ஆதரிக்க வேண்டும். எப்போதும் ஒரு இயக்குநருக்கும் நடிகருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)