Advertisment

“விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும்” - ஆர்.கே.செல்வமணி

rk selvamani speech at Accused Audio Launch

Advertisment

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் எம்.ஐ.ஒய். ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அக்யூஸ்ட்’. இப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டு பேசுகையில், “அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

rk selvamani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe