shooting

கரோனா அச்சுறுத்தலால் தமிழ் சினிமா ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில்தான் சின்னத்திரை ஷுட்டிங்கிற்கும், திரைப்பட இறுதிக்கட்ட பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதிகபேர் கொண்டு வேலை செய்யப்படும் திரைப்பட ஷுட்டிங்கிற்கு இப்போது அனுமதி வழங்கப்படாது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரைத்துறையைச் சார்ந்த பல சங்கங்கள் திரைப்பட ஷுட்டிங் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் ஃபெப்சி சங்க தலைவர் ஆர். கே. செல்வமணி தற்போது கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "இந்தக் கரோனா லாக்டவுன்‌ வேலை நிறுத்தத்தால்‌ திரைப்படத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,‌ அவர்கள்‌ துயர் துடைக்கும்‌ விதமாக நடிகர்‌ சிவகுமார்‌, சூர்யா, கார்த்தி‌ ரூ. 80 லட்சம்‌ நிதியுதவி வழங்கியுள்ளார்‌கள். ஏற்கெனவே இவர்கள்‌ சார்பில்‌ மார்ச்‌ மாதத்தில்‌ ரூ 10 லட்சம்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்திற்கு வழங்கப்பட்டது. ஆகமொத்தம்‌ ரூ 90 லட்சத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிய சிவகுமார்‌, சூர்யா, கார்த்தி‌ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

Advertisment

இந்த 80 லட்ச ரூபாயையும்‌ 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாக தலா ரூ 400/- வழங்குவதென முடிவு செய்துள்ளோம்‌. இந்தப்‌ பணம்‌ வரும்‌ திங்கட்கிழமை முதல்‌ சங்கங்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌.

ஏற்கனவே 6 மாதத்திற்கு மேலாக தமிழ்த்‌ திரைப்படத்துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌ பட்டினியால்‌ வாடிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. நிபந்தனைகளுடன்‌ பணியாற்றுகிறோம்‌. எங்களுக்குப் படப்பிடிப்பிற்கான அனுமதியைத் தாருங்கள் என அரசிடம்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளோம்‌.

Advertisment

Ad

எங்கள் வேண்டுகோளை ஏற்று முதலில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்‌கியது. அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும்‌ முழுமையாகப் பின்பற்றி, பணியாற்றி வருகிறோம்‌ என்பதை அரசுக்குத் தெரிவிப்பதோடு, தமிழக முதல்வர்‌ படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்குமாறு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்‌" என்று தெரிவித்துள்ளார். .