Advertisment

ஆர்.கே. செல்வமணிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்

rk selvamani financier Mukund Chand Bothra case update

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர்.கே. செல்வமணி தற்போது திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisment

கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் பைனான்சியர் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சினிமா பைனான்சியர் போத்ரா ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே. செல்வமணி மற்றும் அருள் அன்பரசு இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம். இதையடுத்து கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே. செல்வமணி ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை பிறப்பித்து, வழக்கு விசாரணையை இன்று (22.09.2023) தள்ளி வைத்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி சுமதி முன்பு ஆர்.கே. செல்வமணி சரணடைந்தார். பின்பு அவரது வழக்கறிஞர் அளித்தமனு, நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. மேலும் வருகிற நவம்பர் 3 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

rk selvamani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe