உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் பல துறைகளின் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.அந்த வகையில் தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் ஃபெப்சி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.இதனால் ஃபெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடிகர்கள் அவ்வப்போது நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/x1080.jpg)
''கரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில்,18 ஆயிரம் பேர் தினக்கூலிகள்.இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை.இதனால் அரசு அறிவித்த இலவசப் பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.எனவே அவர்களுக்குப் பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும்.எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல இதயம் கொண்டவர்கள் இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரமும்,அரிசி மூட்டைகளும் வழங்கி இருக்கிறார்கள்.இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை.தமிழ் திரைப்படத் துறையில் நல்ல நிலைமையில் இருக்கிற நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்படத் துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்படத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)