RK Selvamani elected chairman tamilnadu film directors association

Advertisment

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் நேற்று(28.2.2022) நடைபெற்றது.இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி இருவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 1,883 பேர் வாக்களிக்க தகுதி உடைய நிலையில், அஞ்சல் மூலம் 106 பேர் வாக்களித்துள்ளனர். தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர், இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 21 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (28.2.2022) மாலை எண்ணப்பட்டது. அதில் 955 வாக்குகள் பெற்று ஆர்.கே செல்வமணி மீண்டும் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைஎதிர்த்துப் போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வியைத்தழுவியுள்ளார்.