netflix

வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்து உருவான படம் ஆர்.கே.ரகர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெற்றபோது வெளியாக இருந்த படம் இது. ஆனால், பல்வேறு சிக்கல்களால் வெளியாக முடியாமல் இருந்தது.

Advertisment

தற்போது லாக்டவுன் சமயத்தில் நெட்பிளிக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Advertisment

கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சர்ச்சை உருவானதால், இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.

தற்போது 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீடு பிரச்சினை நடந்து கொண்டிருப்பதால், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று 'ஆர்.கே.நகர்' படத்தை டிஜிட்டலில் வெளியிட்டுவிட்டனர். இதனால் ஏப்ரல் 29- ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நெட்ஃபிளிக்ஸ் இணையத்தில் 'ஆர்.கே.நகர்' படத்தை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இதனை இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே தங்களுடைய ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், தமிழ்த் திரையுலகில் திரையரங்கில் வெளியாகாமல் டிஜிட்டலில் வெளியான முதல் படம் 'ஆர்.கே.நகர்' என்பது குறிப்பிடத்தக்கது.