Advertisment

'ஊரே சிரிக்குது அப்பப்பா...' - கலக்கல் காமெடியாக வெளிவந்துள்ள ஆர்.ஜே.பாலாஜி ட்ரைலர்

 rj balaji in 'veetla vishesham' trailer released

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை 'வீட்ல விசேஷங்க' என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்நிலையில் 'வீட்ல விசேஷங்க' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கலந்த குடும்ப படமாக வெளிவந்துள்ள இந்த ட்ரைலரை இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ட்ரைலரை ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ஜூன் 17 முதல் நம்ம எல்லார் வீட்லயும் விஷேஷம். ஆண்டி, அங்கிள், தம்பி, தங்கச்சி,டேய் பச்சை சட்டை, குடும்பத்தோட முதல் நாள் முதல் காட்சிக்கு வந்துருங்க ஓகே" என குறிப்பிட்டுள்ளார். இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

sathyaraj oorvasi Veetla Visheshanga RJ Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe