/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/442_13.jpg)
கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துமுடித்துள்ளார் சூர்யா. சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடையில் இப்படம் வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சூர்யா, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. மேலும் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில் அதில் இருந்து விலகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை அடுத்து தனது 45வது படத்துற்காக ஆர்.ஜே.பாலாஜியுடன் கைகோர்த்தார் சூர்யா. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில் கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜை இன்று கோவையில் நடந்துள்ளது. அங்கு பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் கலந்து கொள்ள பூஜை நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நாளை(28.11.2024) முதல் கோவையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சூர்யா - ஜோதிகா இருவரும் கர்நாடகா உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நேற்று சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்பு ஜோதிகா மட்டும் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A new happy beginning ❤️ #Suriya45pic.twitter.com/zLa55Sz8DV
— RJ Balaji (@RJ_Balaji) November 27, 2024
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)