Advertisment

பரியேறும் பெருமாள், அசுரன் மாதிரியான படங்களின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி 

 Rj Balaji

Advertisment

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில்,"இந்தப் படத்தின்போது அருண்ராஜா காமராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அதையெல்லாம் தாண்டி இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை எடுத்துள்ளார். ஜெய் பீம், பரியேறும் பெருமாள், அசுரன், பா.ரஞ்சித்தின் படங்கள் வெளியாகும்போது இல்லாத ஜாதியை பற்றி இப்போது ஏன் பேசுகிறார்கள் என்று சிலர் பரவலாக பேசுவதை பார்க்க முடிகிறது. அது உண்மையில்லை. சமீபத்தில் உ.பி.யில் ஒரு 13 வயது தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுபற்றி அந்தப் பெண் போலீசில் புகார் கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது உ.பி.யில்தானே நடந்திருக்கு என்றில்லை. நம் தமிழகத்தில் இன்னும் 445 கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக தகவலறியும் சட்டம் மூலமாகத் தெரியவந்திருக்கிறது. இப்படியான சூழலில் நெஞ்சுக்கு நீதி மாதிரியான படங்கள் வரவேண்டும். 25 வயதுக்கு மேலுள்ள அனைவரது மனதிலும் சாதி ஆழமாக பதிந்துள்ளது என்றால் இனி வரும் குழந்தைகளின் மனதில் இது இல்லை என்ற புரிதலை ஏற்படுத்த இது மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.

RJ Balaji
இதையும் படியுங்கள்
Subscribe