rj balaji sorgavaasal movie case

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.

Advertisment

இப்படம் இன்று(27.12.2024) நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. இதனிடையே இப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “சொர்க்கவாசல் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “திரைப்படம் வெளியாக தடை கேட்பது இப்போது ஒரு பேஷனாகி விட்டது. படத்தை எடுத்துவிட்டு அதற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் இப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யுங்கள்” என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.