Advertisment

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

RJ Balaji - Production no 3 

Advertisment

'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்சன் நம்பர் 3' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

first look RJ Balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe