
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து 'வீட்ல விசேஷம்' படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'சிங்கப்பூர் சலூன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போஸ்டரை பார்க்கையில் ஆர்.ஜே.பாலாஜி முடித்திருத்தம் செய்யும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிகிறது. மேலும் ஷிவானி ராஜசேகர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.