Advertisment

சுவர் ஓவியத்தால் பரபரப்பு... அரசியலில் குதிக்கும் ஆர்.ஜே.பாலாஜி..?

irumbu thirai.jpeg

எப்.எம்-ல் ஆர்.ஜே வாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ட்விட்டரிலும் சமூக கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவர் சமீபகாலமாக 'ஐஸ் அவுஸ் டு வொயிட் அவுஸ்' என்ற காமெடி நிகழ்ச்சி மூலமாகவும் சமூக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஈர்ப்பும் உள்ளது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோட்டில் ஆங்காங்கே சுவர்களில், "மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! என வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம்" என்று வரையப்பட்டுள்ளது. மேலும் இந்த திடீர்அறிவிப்புகளால் அரசியல் கலத்தில் தற்போது பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisment
rjbalaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe