/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irumbu thirai_1.jpeg)
ரேடியோவில் ஆர்.ஜே வாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ட்விட்டரிலும் சமூக கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் இவர் சமீபகாலமாக 'ஐஸ் அவுஸ் டு வொயிட் அவுஸ்' என்ற காமெடி நிகழ்ச்சி மூலமாகவும் சமூக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், ஈர்ப்பும் உள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ரோட்டில் ஆங்காங்கே சுவர்களில், "மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! என வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம்" என்று வரையப்பட்ட திடீர் அறிவிப்புகளால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரு நாஞ்சில் அவர்களும் ஆர்.ஜே.பாலாஜியுடன் அரசியலில் இணையப்போவதாக அறிவித்தார். மேலும் ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்...? அவர் உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி இருக்கும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக 'எல்கேஜி' என்ற படத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜியின் அப்பாவாக திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் நடிக்கிறார். அரசியலை மையப்படுத்தி காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கியிருக்கிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருப்பதாவது... "நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக. LKG" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dde-y_cv0ae54ko.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/ddfdu09v4aaiwjj.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dde5uzcvqaaadfy.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/dc-cycxvqaaqknt.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/ddf8qi6vwaa23zy.jpg)