ADVERTISEMENT

தயாரிப்பாளருக்கு வாட்சு, இயக்குநருக்கு தங்க செயின் - அசத்தும் ஆர்.ஜே பாலாஜி

11:27 AM Jun 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பதாய் ஹோ'. இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் ஆர்.ஜே பாலாஜி வீட்ல விசேஷம் என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார். இப்படத்தை என்.ஜே சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் இணைந்து Romeo Pictures நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த 17 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வீட்ல விசேஷம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே பாலாஜி படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார். வீட்ல விசேஷம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுலுக்கு விலை உயர்ந்த வாட்சும், படத்தின் மற்றொரு இயக்குநரான என்.ஜே சரவணனுக்கு தங்க சங்கிலியும் பரிசாக வழங்கினார். அத்துடன் இப்படத்தின் உதவி இயக்குநர்களுக்கு ரூ.1 லட்சம் பணத்திற்கான காசோலையும் பரிசளித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் படம் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து கமல் படக்குழுவினருக்கு கார், வாட்சு, பைக் உள்ளிட்டவைகளை பரிசாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT