rj balaji

அமித் ஷர்மா இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவானஇப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்தியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. முடிவில், ‘பதாய் ஹோ’ படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையைப் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றினார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5e57dbd0-32a3-4fdd-912d-0f76275b7de1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_4.png" />

Advertisment

இந்த நிலையில், ‘பதாய் ஹோ’ படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நாயகனாகவும் நடிக்க இருக்கிறார். தற்போது நடிகர், நடிகை தேர்வில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' எனப் பெயர் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, 'வீட்ல விசேஷங்க' என்ற பெயருக்கான உரிமையைக்கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.பாக்யராஜிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.