Skip to main content

‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
mk amman


எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆர். ஜே. பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகும் மற்றொரு படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். என்.ஜே. சரவணன் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்குகிறார் பாலாஜி.


இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் நயன்தாராவின் கதாபாத்திரம் பயணிப்பதுபோல இருப்பதாக முன்பே செய்திகள் வெளியாகின. மேலும், ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஐசரி கணேஷ்தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். 

மே 1ஆம் தேதி படம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 


இந்நிலையில் படத்திலிருந்து ஒருசில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது சாமி காதாபத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் 48 நாட்களுக்கு விரதம் இருந்து நயன்தாரா நடித்தார் என்றும், படக்குழு மொத்தமும் இந்த பட ஷூட்டிங்கிற்காக சைவம் மட்டும் எடுத்துக்கொண்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் கொடுக்கப்பட்ட பேட்டியில் ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், “கரோனா பிரச்சனை அனைத்தும் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு மக்கள் திரும்பிய பின்னரே மூக்குத்தி அம்மன் படம் வெளியிடப்படும். இதை நானும் எனது தயாரிப்பாளரும் இணைந்து முடிவு செய்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.