rj balaji about Ishari Ganesh

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியில், ஐசரி கணேஷ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி, “எல்.கே.ஜி பட சமயத்தில் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்கு தெரியும். பவர்ஃபுல்லான மனிதராகத் தான் அவரை பார்த்தேன். அதனால் தான் அரசியல் படம் எடுக்கிறோம், அது தடை இல்லாமல் எடுக்க வேண்டும், எங்க எல்லாத்திற்குமே தெரிந்த, பிடித்த நபரேதயாரிப்பாளராக இருக்க வேண்டும்என முடிவெடுத்தோம்.

Advertisment

அவரை ரொம்ப புடிக்கும், தெரிந்த மனிதர். இதையெல்லாம் தாண்டி, சினிமாவில் அவர் தான் எனக்கு எல்லாமே. மேலும் சினிமா சார்ந்த உறவாக மட்டும் இதைப் பார்க்கவில்லை. அப்பா மாதிரி தான் பார்க்கிறேன். எனக்கு தெரிந்த ஒருத்தர், அவரை ரொம்ப புடிக்கும்.அதன் பிறகு சினிமாவில் அவர்தான் எல்லாமே. பின்பு அவர் சினிமாவிற்கு அப்பார்ப்பட்ட மனிதர். அப்படித்தான் அவரை நான் பார்க்க விரும்புகிறேன். இது எப்பவுமே மாறாது.

ஒரு தயாரிப்பாளராக அவரைப் பார்த்தால், இதுவரை நான் எடுத்த இரண்டு படத்திற்கு, ஒரு முறை கூட ஃபோன் பண்ணி என்ன நடக்குது அங்க என கேட்டதில்லை. என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். நானும் அதற்கு மதிப்பளித்து, கடினமாக உழைப்பேன். அந்த நம்பிக்கையை உடைத்திடக்கூடாதென பயப்படுவேன்” என்றார்.

Advertisment