Advertisment

"100 கோடி மக்கள் இருக்கிற இந்த நாட்டில் ஒரு லட்சம் வெண்டிலேட்டர் தான் இருக்கு... வெளியே வராதீங்க ப்ளீஸ்.." - ரித்விகா வேண்டுகோள்!

கரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக நடிகை ரித்விகா வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம். இப்ப 144 தடை உத்தரவு போட்டு இருக்காங்க. ஆனால் மக்கள் பெரும்பாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருந்தால்தான் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். நமக்கு எல்லாம் கரோனா வராது என்று நினைக்காதீங்க. 100 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒரு லட்சம் வெண்டிலேட்டர்தான் இருக்கு.

Advertisment

fg

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சைத்தான் அளிக்கப்பட வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் அவர்களால் எப்படி முறையான சிகிச்சை அளிக்க முடியும். அதனால்தான் இந்த 144 தடை போடப்பட்டு இருக்கு. சென்னையில் வெள்ளம் வந்த போது நாம் எல்லாம் பத்து பதினைந்து நாட்கள் வீட்டில்தான் முடங்கி இருந்தோம். அப்போது டிவி, செல்போன் கூட இல்லை. எல்லாம் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனவே தனித்து இருந்து நம்மையும் சமூகத்தையும் காப்போம்" என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe