தமிழில் பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பவர் ரியாஸ்கான்.தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/riyaz khan.jpg)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே யாரும்வரக்கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அப்படி வீட்டைவிட்டு வெளியே வருபவர்களைக் காவல்துறையினர் கைது செய்து தக்க தண்டனை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரியாஸ்கான், பனையூா் ஆதித்யாராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.கடந்த செய்வாய்க்கிழமை அன்று, அவரது வீட்டின் அருகே சுமாா் 10 போ் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதைப் பாா்த்த ரியாஸ்கான்,ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கூட்டமாக நின்று பேச வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.
இதற்கு அவா்களில் சிலா்,எதிா்ப்பு தெரிவித்து ரியாஸ்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து,தாக்க முயன்றுள்ளனர்.இது குறித்து ரியாஸ்கான்,கானத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Follow Us