/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vis.jpg)
பல இன்னல்களுக்கு இடையே 2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படம் மெகா ஹிட்டானது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீவிர அரசியலுக்கு நடுவே இப்படத்தை மிக விரைவில் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா, விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் ரெடி என்றும் இந்த டிரைலர் மிக விரைவில் வெளியாகும், என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஜினியின் காலா டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய இந்த சமயத்தில் தற்போது விஸ்வரூபம் 2 டிரைலர் பற்றிய அறிவிப்பு இருவரின் அரசியலை தாண்டி சினிமாவிலும் போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. மேலும் காலா டீசரை பார்த்ததையடுத்து தற்போது விஸ்வரூபம் 2 பட டிரைலருக்கு ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)