style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான நடிகை ரித்விகா தனக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக ஒரு பட விழாவில் தெரிவித்து உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது...."நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும், திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் தான் முடிவு செய்வார்" என்று விளக்கம் அளித்துள்ளார்.