Rithu Rocks

Advertisment

ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்சிஜன் (O2). இப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யூட்யூப் பிரபலம் ரித்து ராக்ஸை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் O2 படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

"முதல் படத்திலேயே நயன்தாரா மேம்-முடன் நடித்தது ரொம்பவும் ஹேப்பியாக இருக்கு. யூட்யூப் வீடியோவுக்கு சின்ன கேமரா வச்சு எடுப்போம். இங்க பெரிய கேமரா வச்சு எடுத்தாங்க. நாங்க ரெண்டு லைட்டுதான் வச்சிருப்போம். படம் எடுக்கும்போது நிறைய லைட்ஸ் வச்சிருந்தாங்க. ஷூட்டிங் போகும்போதே கையில் பொம்மை எடுத்துகிட்டு போவேன். அங்க பிரேக் டைம் இருக்கும்போது அதை வச்சு விளையாடிக்கிட்டு இருப்பேன்.

நான் விஜய் சார் ரசிகராக இருந்தாலும் அஜித் சாரையும் பிடிக்கும். அவருடைய வலிமை படம் சூப்பரா இருந்துச்சு. அஜித் சார் படத்துல வர்ற பைக் ஸ்டண்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். எனக்கு விஜய் சார் படத்துல அவர் பையனா நடிக்கணும் ஆசை.

Advertisment

ஒருமுறை நான் ஸ்ரீலங்கா போயிருந்தேன். அங்க ஒரு ஃபேமிலி என்னுடைய ஃபேன். என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய் நிறைய கிப்ட்ஸ் கொடுத்தாங்க. அதை என்னால் மறக்கவே முடியாது. அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க என் அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க".