style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நிமிர்ந்து நில், மாசு என்கிற மாசிலாமணி, வழக்கு எண் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் அடுத்தாக ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து அவர் பேசுகையில்.... "'வழக்கு எண்' படத்திற்கு பிறகு எனக்கு முக்கியமான படம் இது. காரணம் இந்த வகை படம் நமது நாட்டுக்கு புதியது. இனி இதுபோன்ற விண்வெளி படங்கள் நிறைய வரும். அதற்கான தொடக்கப்புள்ளி இது. இந்த கதாபாத்திரத்துக்காக 6 கிலோ எடை குறைத்தேன். திருமணத்துக்கு பின் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று வரைமுறை சொல்வது எனக்கு பிடிக்காது. கணவர் அனுமதித்தால் என்ற வார்த்தையை கேட்டாலே கோபம் வருகிறது. அவர் ஏன் நம்மை அனுமதிக்க வேண்டும்..? திருமணம் வேறு. நடிப்பு வேறு.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">