Skip to main content

பவர் ஸ்டாருக்கு முன்னோடி, அழகிரிக்குத் தம்பி, சுதாகரனுக்கு.... - ஜே.கே.ரித்திஷ் கதை

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

2008ஆம் ஆண்டு... நாயகன் என்ற பெயரில் ஒரு படத்தின் போஸ்டர் தமிழக மக்களை நின்று கவனிக்க வைத்தது. இரண்டு காரணங்கள்... ஒன்று 'நாயகன்', கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தமிழின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆல் டைம் பெஸ்ட் மூவி. அந்தப் பெயரில் வந்திருக்கும் திரைப்படம். இன்னொரு காரணம், 'யார்ரா இது...' என்று கேட்கும் அளவுக்கு உடையிலும் நடையிலும் கவனிக்கவைத்த அந்த ஹீரோ. அதற்கு முன்பே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் 'நாயகன்' படம்தான் ஜே.கே.ரித்தீஷை அனைவரும் கவனிக்க வைத்தது. ஓப்பனிங் சாங், ஹீரோ பில்ட்-அப் என அத்தனை அட்டகாசங்களையும் அந்தப் படத்தில் செய்திருந்தார் ரித்திஷ். அந்தப் படம் வெளிவந்த போதே ஊர் ஊருக்கு ரசிகர் மன்ற பேனர்கள் எல்லாம் வைக்கப்பட்திருந்தன. 'யாருய்யா இது... யாருன்னே தெரியாது, ஆனா ரசிகர் மன்றமெல்லாம் இருக்கு' என்று அனைவருக்கும் கேள்வி எழுந்தது.
 

rithesh

 

அந்தப் படம் வெளிவரும் முன்பே, 'சின்னப்புள்ள', 'கானல் நீர்' போன்ற படங்களில் நடித்திருந்தார் ரித்திஷ். அப்பொழுதே தனக்கென ரசிகர் மன்றங்களை அமைத்துக்கொண்டார். அந்த சமயத்தில் வடபழனியில் ஓடிய பல ஆட்டோக்களில் இவரது படம் இருந்தது. வடபழனியில் தலைமை ரசிகர் மன்றமும் இருந்தது. ஊர் ஊருக்கு மன்றங்கள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு உதவி, முதியோருக்கு உதவி என அவ்வப்போது ரித்திஷ் குறித்து செய்திகள் வெளிவந்தன. 'நாலு பேர் சேர்ந்து சென்னைக்குப் போய் உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்குறோம்னு சொன்னா காசு தாறாராம்' என்று ஊர் ஊருக்குப் பலர் கிளம்பினார்கள். அந்த அளவுக்கு வாழும் வள்ளலாய் கொஞ்ச நாட்கள் இருந்தார் ரித்திஷ். 'நாயகன்' படத்தை ஓரிரு அரங்குகளில் நூறு நாட்கள் ஓட்டினார். இவர் செய்வது வெட்டிச் செலவு என்று அப்போது பலர் கூறினார்கள். ஆனால், 'நட்சத்திர ஜன்னலில்', 'வெற்றிக்கொடி கட்டு' போன்ற பாடல்களில் ஒரே பாட்டில் முன்னேறும் ஹீரோ போல, முதலில் சினிமா, அப்புறம் அரசியல், நேரே நாடாளுமன்றம் என்று முன்னேறினார் ரித்திஷ்.
 

எங்கிருந்து ஒருவருக்கு இவ்வளவு பணம் என்ற கேள்வியும் அதன் பின் பல யூகங்களும் தொடர்ந்து வந்தன. ரித்திஷ், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனின் பினாமி எனவும் சுதாகரனின் பணம்தான் இப்படி விளையாடுகிறது என்றும் சிலர் கூறினார்கள். அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ரித்திஷ். தான் திமுக முக்கியஸ்தர் சுப.தங்கவேலனின் உறவினர் எனவும், தனக்கு பல தொழில்கள் இருப்பதாகவும் பதில் கூறினார் ரித்திஷ். பிறகு ராமநாதபுரத்தில் இவருக்கும் இவரது தாத்தா என சொல்லப்பட்ட தங்கவேலனுக்கும் மோதல் உண்டானது. திமுகவில் அழகிரி அணியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தார் ரித்திஷ். திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட போதும் சில நாட்கள் அவருடன் தொடர்ந்தார். பின்னர், அங்கு தனக்கு எதிர்காலம் இல்லையென உணர்ந்து அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலில் தினகரனை ஆதரித்த இவர் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்தார். 
 

ritheesh

 

தன்னை டாக்டர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவுக்குள் வந்த 'பவர்ஸ்டார்' சீனிவாசனின் முன்னோடி இவர் என்று சொல்லலாம். ரித்திஷைப் போலவே சினிமாவில் அதிரடி ஹீரோவாக நடித்து, சென்னையில் ஒரு திரையரங்கை கான்டராக்ட் எடுத்து தனது 'லத்திகா', 'ஆனந்தத்தொல்லை' படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, மெல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கலந்தார் சீனிவாசன். பிறகு, அங்கு கண்டுகொள்ளப்படாமல் போக சினிமாவில் வாய்ப்புகள் வந்து பிஸியானார். இப்போது தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், ஜே.கே.ரித்திஷ் அளவுக்கு பவர்ஸ்டார் அரசியலில் வெற்றி பெறவில்லை. எப்படி வந்தார், எப்படி வளர்ந்தார் என பலரையும் புருவம் உயர்த்த வைத்த வகையில் ரித்திஷ் வாழ்க்கை தனித்துவம் வாய்ந்ததுதான்.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

“விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன்” - விஷால் பேட்டி

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

nn

 

நடிகர் விஷால் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது 46வது பிறந்த நாளை ஒட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது, “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். ஒரு நான்கு பேர் அமர்ந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்களும் ரசிகர்களும் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது. 45 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் நடிகர் ரஜினி மக்களை தற்போது வரை மகிழ்வித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் திரையில் சாதனை படைத்து வருகிறார். அமைச்சர் உதயநிதி செயல்பாடுகள் பற்றி மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர அது பற்றி எனக்கு தெரியாது” என்றார்.