Advertisment

அறக்கட்டளை ஆரம்பித்த ரிஷப் ஷெட்டி

Rishabh Shetty started the foundation

கடந்த ஆண்டு வெளியான 'காந்தாரா' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தை அவர் இயக்கி நடித்திருந்த நிலையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

கடந்த 7 ஆம் தேதி தனது 40வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார் ரிஷப் ஷெட்டி. அந்த விழாவில் அவரது மனைவி பிரகதி, ‘ரிஷப் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளதாகத்தெரிவித்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ இந்த அறக்கட்டளை உறுதுணையாக இருக்கும் என அறிவித்தார்.

Advertisment

பின்பு ரிஷப் ஷெட்டி, சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததற்கு நன்றி எனத்தெரிவித்தார்.

Sandalwood Foundation actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe