Advertisment

தாதாசாகேப் பால்கே விருது - 'காந்தாரா' பட புகழ் ரிஷப் ஷெட்டி பெறுகிறார்

Rishab Shetty bags award in  Dadasaheb Phalke International Film Festival 2023

Advertisment

கன்னடதிரையுலகில் பிரபலமான நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்த ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படம் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்டார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்த நிலையில் கன்னடத்தை போலவே வரவேற்பை பெற்றிருந்தது. வசூலிலும் சாதனை படைத்தது.

இதனையடுத்து 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதால் அப்படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் அதற்கு முந்தைய பகுதியில் நடக்கும் கதையாக இருக்கும் என சமீபத்தில் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2023 இல் 'மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் 'காந்தாரா' படத்தில் நடித்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தணிக்கை வாரியம் மற்றும் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விழா வருகிற 20 ஆம் தேதி மும்பையில் நடக்கவுள்ளது.

actor Award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe