Advertisment

“தவறாக சித்தரிக்கின்றனர்” - ரிஷப் ஷெட்டி விமர்சனம்

rishab shetty about bollywood

காந்தாரா படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இப்படம் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற தலைப்பில், முதல் பாகத்தின் முந்தைய கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனிடையே ரிஷப் ஷெட்டி லாஃபிங் புத்தா (Laughing Buddha) என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் கன்னட இயக்குநர் எம்.பரத் ராஜ் இயக்கத்தில் பிரமோத் ஷெட்டி நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் பிரமோத் ஷெட்டியுடன் இணைந்து யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் ரிஷப் ஷெட்டி. அப்போது அவர் பாலிவுட் படங்கள் குறித்துப் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

அந்த நேர்காணலில் ரிஷப ஷெட்டி பேசியதாவது, “பெரும்பாலான பாலிவுட் படங்கள் இந்தியாவை தவறாக சித்தரித்து வருகின்றனர். அந்த படங்கள் கலைப் படைப்புகள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களிலும் சிவப்புக் கம்பளங்களுடன் வரவேற்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை என் தேசம், என் மாநிலம், என் மொழி ஆகியவை எனக்கு பெருமையான ஒன்று. அதனால் பாலிவுட் கலைஞர்கள் ஏன் உலக அளவில் இந்தியாவை பாசிடிவ்வாக காட்டக்கூடாது? அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து பாலிவுட் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Bollywood actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe