Advertisment

ரூ.2150 கோடி செலவு செய்து எடுத்த படத்தின் திரைக்கதையை வெறும் 6000 ரூபாய்க்கு விற்ற ஊழியர்!

ஹாலிவுட் பட பிரான்சைஸில் ஒன்றான ஸ்டார் வார்ஸ் படங்களில் தி ரைஸ் ஆஃப் ஸ்கைவால்கர் என்னும் ஒன்பதாவது பாகம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எக்கச்செக்கமாக இருக்கிறது.

Advertisment

starwars

இந்த படம் அவெஞ்சர்ஸின் சாதனையை எளிதில் முறியடிக்கும் என்று ஹாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட படத்தின் திரைக்கதையை இணையத்தில் வெறும் 65 யூரோக்கு விற்க ஒரு முயற்சி நடைபெற்ற விஷயம் ஸ்டார் வார்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈபேவில் பதிவிட்டதை பார்த்த தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், அதை உடனடியாக வாங்கியிருக்கிறார். 65 யூரோ என்றால் இந்திய மதிப்பில் ரூ.6000 இருக்கும்.

Advertisment

இதை படக்குழுவே அண்மையில் இது உண்மையாக நடந்த விஷயம் என்று தெரிவித்தது. இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் இது குறித்து தெரிவிக்கையில், “படத்தில் நடித்த நடிகர் ஒருவர் படுக்கையில் திரைக்கதை புத்தகத்தை வைத்துவிட்டு ரூமைவிட்டு சென்றுவிட்டார். அப்போது ரூமை சுத்தம் செய்ய வந்த ஹவுஸ் கீப்பிங் மேனுக்கு அந்த புத்தகம் கிடைக்க, அதை ஈபேவில் பதிவிட்டிருக்கிறார்” என்று கூறினார்.

இந்நிலையில் யார் அந்த நடிகர் என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்க, சம்பவத்தை செய்த நடிகரே அண்மையில் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜான் போயேகா என்னும் நடிகரின் திரைக்கதை புத்தகத்தை எடுத்துதான் ஈபேவில் விற்பதற்காக பதிவிடப்பட்டுள்ளது.

இதுவரை 300 மில்லியன் டாலர்கள் இந்த படத்தை உருவாக்க செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு செலவு செய்தும் இந்த படம் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதால் மேலும் 300 மில்லியன் டாலர்கள் செலவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 300 மில்லியன் டாலர் என்றால் ரூ. 2150 கோடி.

hollywood starwars
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe