ஹரிஹரன் ராம். எஸ் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்த படம் 'ஜோ'. இப்படத்தில் சார்லி, அன்புதாசன் மற்றும் ஏகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருந்தார். கடந்த நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் ஹரிஹரன் ராமின் வாழ்க்கையில் நடந்த, நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 15ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.