rio raj about joe movie

ஹரிஹரன் ராம். எஸ் இயக்கத்தில் ரியோ ராஜ், பவ்யா திரிகா நடிப்பில் உருவாகும் படம் 'ஜோ'. விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் 'உருகி உருகி' பாடலின் லிரிக் வீடியோ சில மாதங்களுக்கு முன்புவெளியான நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பாடலாக ‘ஒரே கனா’ பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை வைசாக் எழுத யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் பாடலில் அவர் தோன்றியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து ரியோ ராஜ் பேசுகையில், “இந்த பட கதையை கேட்டவுடன் என்னை அறியாமல் ஒரு ஈடுபாடு வந்துவிட்டது. படம் ஒரு நல்ல லவ் ஸ்டோரியாக இருக்கும். இதில் வரும் முதன்மை கதாபாத்திரம் நம் வாழ்வில் பார்த்து பழகக்கூடிய மனிதராக இருக்கும். படம் பார்த்த நண்பர்கள் அனைவரும் இயல்பாக நடித்துள்ளதாக சொன்னார்கள். எல்லா லவ் படத்திற்கும் இசை ரொம்ப முக்கியம். அந்த வகையில் இசை இந்த படத்திற்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தது. கண்டிப்பாக இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Advertisment

இசையமைப்பாளர் சித்து குமார் பேசுகையில், “எங்க எல்லாருக்கும் யுவன் சங்கர் ராஜா சார் ரொம்ப பிடிக்கும். என்னுடைய கரியரை ஆரம்பிக்க யுவன் சார் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தார். அதனால் அவர் பாடினால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அவருக்கும் பாட்டு பிடித்துவிட்டது. ஒத்துழைப்புடன் பாட்டு பாடி நடித்து கொடுத்தார்” என்றார்.