Advertisment

நண்பராக பழகி கோடிகளில் மோசடி; பிரபல நடிகை புகார்

Rimi Sen Cheated rs 4.4 Crore

இந்தி, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான ரிமி சென் தற்போது டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்பங்கேற்று வருகிறார். இவர் மும்பையில் சிறிய அளவிலான நிதி நிறுவனம் நடத்திவரும் தொழிலதிபர் ரவுனாக் ஜதின் வியாஸ் என்பவர்தன்னிடம் ரூ.4.41 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், " மூன்றாண்டுகளுக்கு முண்டு அந்தேரியில் உள்ள ஜிம்மில் தான் சந்தித்தேன். அதன் பிறகு நட்பாக பழகி வந்த ரவுனாக் ஜதின் வியாஸ் எங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் எனத்தெரிவித்தார். இதனை நம்பி அவரது நிதி நிறுவனத்தில் ரூ. 4.14 கோடி முதலீடு செய்தேன். ஆனால் இதுவரை முதலீடு செய்த பணத்துக்காக வட்டியோஅல்லது அசலோதரவில்லை.என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த ரவுனாக் ஜதின் வியாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்துஅவர் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisment

money scam Bollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe