கரோனாவால் பாதிக்கப்பட்ட பாட்டிக்கு உதவ முன்வந்த பிரபலம்! 

ritesh deshmuk

தற்போதைய கரோனா காலகட்டத்தில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். துணை நடிகர்களாக நடித்தவர்கள்காய்கறி விற்பதற்கும் மீன் விற்பதற்கும்செல்வதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பாட்டி ஒருவர் சாலையின் ஓரத்தில் சிலம்பம் சுற்றி சாலையில் செல்பவர்களிடம் அன்பளிப்புகளைப் பெற்றுவந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்தத் தள்ளாத வயதில் இவ்வளவு அழகாகச் சிலம்பம் சுற்றும் பாட்டியைப் பாராட்டி வந்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது ட்விட்டரில் அந்த பாட்டியின் வீடியோவை பகிர்ந்து. இவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்று பலரும் அந்தப் பாட்டியைக் கண்டுபிடிக்க உதவினார்கள். இறுதியாக அந்தப் பாட்டியைக் கண்டுபிடித்து தொடர்புகொண்டுவிட்டதாக ரித்தேஷ் தெரிவித்துள்ளார்.

Bollywood riteish deshmuk
இதையும் படியுங்கள்
Subscribe