Advertisment

#Exclusive கோமாளி படத்தில் ரஜினி கிண்டல் காட்சி வைத்தது ஏன்..? - ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் விளக்கம்  

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் இணைந்து நடித்த கோமாளி படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் காட்சியில் ரஜினியை கிண்டல் செய்த காட்சி ஒன்று இடம்பெற்றது. அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வலுக்கவே அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கியது படக்குழு. இதையடுத்து காட்சி நீக்கப்பட்டு அந்த படம் வெளியானது.

Advertisment

richard

இந்நிலையில் இந்த காட்சி வைத்தது குறித்த காரணத்தை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விளக்கமளித்து பேசியபோது....''கோமாளி படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி வைத்தபோதே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காட்சியை வைக்கலாமா வேண்டாமா என்று. நானும், ஜெயம் ரவியும் கூட இந்த காட்சியால் எந்த பிரச்சனையும் வந்துவிடாதே என்று கேட்டோம். அதற்கு இயக்குனர், இது நாம் வெறும் காமெடிக்காகத்தானே வைக்கிறோம் ஒரு பிரச்சனையும் வராது என்று சமாதானப்படுத்தினார். ஆனால் நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக. அதனால் அந்த சீனை நாங்கள் தூக்கிவிட்டோம்'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Kk7-b3Zygho.jpg?itok=6pYGBGy5","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Actor Rajinikanth comali
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe