உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுசாந்தின் காதலி கடிதம்!

rhea chakraborty

பாலிவுட் நடிகரான சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தம் காரணமாகதான் காலமானார் என்று போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல்தான் காரணம், அதனால் இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சுசாந்த்மரணித்து ஒரு மாதம் ஆனதைத் தொடர்ந்து அவருடைய நண்பர்கள் பலர் அவர் குறித்தபதிவுகளைப் பதிவிட்டனர். சுசாந்தின் காதலியான ரிஹா சக்ரபாரதி பதிவிட்டுள்ள பதிவில், “மதிப்புக்குரிய அமித் ஷாவுக்கு... நான் சுஷாந்தின் காதலி ரிஹா. அவரின் திடீர் மறைவு நிகழ்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. அரசின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதில் நீதி வேண்டி, சி.பி.ஐ. விசாரணைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று நான் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த முடிவை எடுக்க சுஷாந்தைத் தூண்டியது எது என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sushant Singh Rajput
இதையும் படியுங்கள்
Subscribe