Advertisment

சசிகலா பற்றிய  படத்தில் 'ஈ' யார்? -சர்ச்சையை கிளப்பும் இயக்குனர்!

rgv

சர்ச்சையான படங்களையும், சர்ச்சையான கருத்துகளையும் வெளியிட்டு பரபரப்பைகிளப்பி வருபவர்பிரபலஇயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்த கரோனாஊரடங்கில்மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்த ராம்கோபால் வர்மா,சமீபத்தில் பிரபலதனியார் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர்அர்னாப்கோஸ்வாமியை பற்றி படம் எடுக்கப்போவதாக அறிவித்து பரபரப்பைகிளப்பினார். இந்தநிலையில், சசிகலாவை பற்றி அதேபெயரில் படமெடுக்கப்போவதாக கூறி, தற்போது மீண்டும் பரபரப்பைகிளப்பியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகதனதுட்விட்டர் பக்கத்தில்,ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்திருக்கும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளஅவர், "ஜெயலலிதாவிற்கு ஒரு முகம், சசிகலாவிற்கு இரண்டு முகம், ஈ -க்குமூன்று முகம் உள்ளது. உண்மைக்கு பின்னால் இருக்கும்உண்மைகள்பிப்ரவரியில் வெளியிடப்படும்"எனக் கூறியுள்ளார்.மேலும் தலைவி படம் வெளியாகும்அன்றே,தான் எடுக்கும்சசிகலா படமும்வெளியாகும்எனவும், அதற்கு,தலைவி படத்தில் சசிகலாஇல்லையென்பதும், தான் ஈ என்ற நபரோடு சேர்த்துமுழுக்கதையையும் காட்ட விரும்புவதே காரணம்எனகுறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ராம்கோபால் வர்மாமேலும், "ஜெ, எஸ், டி,ஐ,ஈ ஆகிய நபர்கள், சசிகலாபடத்தின்கூடுதல்மற்றும் முக்கியபத்திரமாக இருப்பார்கள். படத்தின்ட்ரைலர், டிசம்பர்முதல் வாரத்தில் வெளியிடப்படும். 'ஈ' என்ற உண்மை சசிகலாவின்பின்னால் மறைந்திருக்கிறது" எனவும்கூறியுள்ளார்.

ராம்கோபால் வர்மாவின்இந்த அறிவிப்பு, மீண்டும் சர்ச்சையைகிளப்பியுள்ளது.

ramgopal varma sasikala biopic jayalalitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe