retro title teaser comics released

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது படக்குழு. பின்பு இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் பாடல் உரிமையை பிரபல நிறுவனமான டீ - சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 14ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இப்படக்குழு இதுவரை வெளியிட்ட முன்னோட்ட வீடியோக்களின் மேக்கிங்கை காமிக்ஸ் வடிவில் வெளியிட்டு வருகிறது. முதலாவதாக ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ வீடியோவின் மேக்கிங்கை வெளியிட்ட படக்குழு அதன் உருவாக்கத்தையும் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்ததாக டைட்டில் டீசர் மேக்கிங்கை வெளியிட்டு அதன் உருவாக்கத்தையும் வெளியிட்டுள்ளது. அதில், சூர்யா - பூஜா ஹெக்டே பேசும் காட்சிற்கு லைட் இல்லாமல் ஒளிப்பதிவாளர் கொடுத்த ஐடியாவை வைத்து படமாக்கப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளது.

Advertisment

படத்தின் அசோசியட் டைரக்டர் கூறியதாக பகிர்ந்துள்ள படக்குழு, “முதல் காட்சி எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது. எங்கள் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ், ஆரம்பத்தில் பகல்நேர படப்பிடிப்புக்காகத் திட்டமிடப்பட்டிருந்ததால், இரவு நேர படப்பிடிப்புக்கு கூடுதல் லைட்டுகளை கொண்டு வரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் பின்னர் அவரே 100-200 அகல் விளக்குகளை கொண்டு வந்து ஒரு தற்காலிக லைட் செட்டிங்கை உருவாக்கினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.