retro movie second single kanima released

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது படக்குழு. பின்பு இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘கண்ணாடி பூவே’ பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘கனிமா’ பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளார். விவேக் எழுதியுள்ளார். லிரிக் வீடியோவில் படத்தில் சூர்யாவிற்கும் பூஜா ஹெக்டேவுக்கும் கல்யாணம் நடக்கும் நிலையில் அப்போது மண்டபத்தில் இடம் பெறும் பாடலாக அமைந்துள்ளது. குத்து பாடலாக அமைந்துள்ள இப்பாடலில் சர்பிரைஸாக சந்தோஷ் நாராயணன் நடனமாடியுள்ளார். குறிப்பாக பாடலின் இறுதியில் வரும் ஃபாஸ்ட் பீட்டில் அதற்கேற்றவாறு குத்தாட்டம் போட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.