retro bts released in comics

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது படக்குழு. இந்த வீடியோ சிங்கில் ஷாட்டாக அமைந்திருந்தது.

Advertisment

பின்பு இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் பாடல் உரிமையை பிரபல நிறுவனமான டீ - சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் டைட்டில் டீசர் வெளியானது. இந்த நிலையில் படக்குழு முன்பு வெளியிட்ட ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ வீடியோவின் மேக்கிங் வீடியோவை காமிக்ஸ் வடிவத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ உருவானதையும் வெளியிட்டுள்ளது.

Advertisment