request from paased away actress uma ramanan

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன்(72) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்..’ என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்க, 1981 ஆம் ஆண்டில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ‘ஆனந்த ராகம் கேட்கும் நேரம்’ பாடல் இன்றளவும் பலரின் கவனத்தைப்பெற்று வருகிறது.

Advertisment

இளையராஜாவின் இசையில் மூடுபனி, கர்ஜனை எனத்தொடர்ந்து பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மேலும், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.ராஜேந்தர், தேவா, சிற்பி, வித்யாசாகர், மணி ஷர்மா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்களின் இசையிலும் உமா ரமணன் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். இந்த நிலையில் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் உமா ரமணன் வசித்து வந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதையடுத்து உமா ரமணன் கணவரான ஏ.வி.ரமணன், இறுதி சடங்கின் போது, ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்கள், பிரைவேசி காரணமாக வீட்டிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த முடிவு உமா ரமணனின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment