Advertisment

நடிகையின் உடம்பில் உள்ள மச்சங்களை எண்ணிவிட்டீர்களா...? சர்ச்சையை கிளப்பிய நிருபரின் கேள்வி 

Suresh Kondeti asks controversy question dj tillu actor siddhu

இயக்குநர் விமல் கிருஷ்ணாஇயக்கத்தில் நடிகர் சித்து நடிப்பில் 'டிஜே டில்லு' என்ற தெலுங்கு படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நேஹா ஷெட்டி நடித்துள்ளார். பக்கா கமர்ஷியல் ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இப்படத்தின்ட்ரைலர்வெளியீட்டு விழா நேற்று (3.2.2022)நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சித்து உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுபலரதுகேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த ட்ரைலரில் நடிகர் சித்து, கதாநாயகி நேஹா ஷெட்டியை பார்த்து "உன் உடலில் எத்தனைமச்சம் உள்ளது" என கேட்பார், அதற்கு கதாநாயகி 16 என பதில் கூறும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

Advertisment

இந்த காட்சியை குறிப்பிட்டு பிரபல தெலுங்கு சினிமா பத்திரிகையாளரும், படத்தயாரிப்பாளருமானசுரேஷ் கொண்டேத்தி, "நடிகையின் உடலில் 16 மச்சங்கள் உள்ளது என இப்படத்தில் கண்டுபிடித்துவிட்டீர்கள். அதேபோல நிஜ வாழ்க்கையில் கதாநாயகியின் உடலில் உள்ள மச்சங்களை எண்ணிவிட்டீர்களா..?" என படத்தின் நாயகன் சித்துவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் அதற்குபதிலளிக்கவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிலர் சுரேஷ், பெண்களை மதிக்க தெரியாதவர்என தங்களின் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்துநடிகை நேஹா ஷெட்டியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரதுட்விட்டர் பதிவில், "இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இதன்மூலம் சுரேஷின் பெண்களை மதிக்கும் முறை நன்றாகவே வெளிப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சுரேஷ் "நான் எந்த வித இரட்டை அர்த்தத்தில் கேட்கவில்லை"என மறுப்பு தெரிவித்துள்ளார்.

neha shetty telugu cinema dj tillu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe