Skip to main content

நடிகையின் உடம்பில் உள்ள மச்சங்களை எண்ணிவிட்டீர்களா...? சர்ச்சையை கிளப்பிய நிருபரின் கேள்வி 

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Suresh Kondeti asks controversy question dj tillu actor siddhu

 

இயக்குநர் விமல் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சித்து நடிப்பில் 'டிஜே டில்லு' என்ற தெலுங்கு படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நேஹா ஷெட்டி நடித்துள்ளார். பக்கா கமர்ஷியல் ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (3.2.2022)  நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சித்து உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பலரது கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த ட்ரைலரில் நடிகர் சித்து, கதாநாயகி நேஹா ஷெட்டியை பார்த்து "உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது" என கேட்பார், அதற்கு கதாநாயகி 16 என பதில் கூறும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.  

 

இந்த காட்சியை குறிப்பிட்டு பிரபல தெலுங்கு சினிமா பத்திரிகையாளரும், படத் தயாரிப்பாளருமான சுரேஷ் கொண்டேத்தி, "நடிகையின் உடலில் 16 மச்சங்கள் உள்ளது என இப்படத்தில் கண்டுபிடித்துவிட்டீர்கள். அதேபோல நிஜ வாழ்க்கையில் கதாநாயகியின் உடலில் உள்ள மச்சங்களை எண்ணிவிட்டீர்களா..?" என படத்தின் நாயகன் சித்துவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிலர் சுரேஷ், பெண்களை மதிக்க தெரியாதவர் என தங்களின் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். 

 

இதுகுறித்து நடிகை நேஹா ஷெட்டியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், "இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இதன்மூலம் சுரேஷின் பெண்களை மதிக்கும் முறை நன்றாகவே வெளிப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சுரேஷ் "நான் எந்த வித இரட்டை அர்த்தத்தில் கேட்கவில்லை"  என மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநர் மற்றும் நடிகர் கே. விஸ்வநாத் காலமானார்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Director and actor K. Viswanath passed away

 

மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே. விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

 

1965 ஆம் ஆண்டில் அறிமுகமான கே.விஸ்வநாத் தான் இயக்கிய முதல் படமான ‘ஆத்ம கவுரவம்’ படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதை வென்றார். தொடர்ந்து தமிழிலும் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தமிழில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, லிங்கா, உத்தம வில்லன் எனப் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

 

மேலும் 5 தேசிய விருதுகள், 7 நந்தி விருதுகள், 10 மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத் இல்லத்தில் ஓய்வில் இருந்த விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Next Story

4வது திருமணத்திற்கு 3வது மனைவி கொலை மிரட்டல் - கோர்ட்டுக்கு போன பிரபல நடிகர்

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

actor naresh actress pavithra issue

 

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'அயோக்யா', 'க/பெ ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷை காதலித்து வந்தார். 

 

நடிகர் நரேஷ், இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று தற்போது மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தபோது நரேஷின் 3வது மனைவி ரம்யா அவர்களை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று நடிகர் நரேஷும் நடிகை பவித்ராவும் திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ மீண்டும் பேசும் பொருளாக மாற நரேஷின் முன்றாவது மனைவி ரம்யா, எங்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று நிலையில் எப்படி அவர் நான்காவது திருமணம் செய்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இந்த நிலையில் நடிகர் நரேஷ்  குடும்ப நல நீதிமன்றத்தில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், "எனக்கும் எனது மூன்றாவது மனைவி ரம்யாவுக்கு, 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. பின்பு விவாகரத்து எடுக்க முடிவே செய்து அவரிடம் விவாகரத்து கேட்டேன். விவாகரத்து கொடுக்க பணம் கேட்டார். அந்த பணத்தை கேட்டு மிரட்டவும் செய்தார். பணம் மற்றும் சொத்துக்காக ரம்யா என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.