‘கல்லூரி காலங்கள்’ என்ற படத்தை இயக்கியவர் ரெமோ ஷிவா. இவர் தற்போது நடிகராக மாறியிருக்கிறார். சமீபத்தில் வெளியான மாஸ்டர் தினேஷ், யோகிபாபு நடிப்பில் வெளியான "லோக்கல் சரக்கு" படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தார். மேலும் விமல் நடிப்பில் உருவான "தெய்வமச்சான்" படத்தில் விமலுக்கு அண்ணனாக குணச்சித்திர நடிப்பில் நடித்திருந்தார்.
ரெமோ ஷிவா தற்போது ரேணிகுண்டா, கருப்பன் திரைப்பட இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகிவரும் திரைப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர முக்கிய இயக்குநர்களின் ஆறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும்நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.