டி.ராஜேந்தர் இளைய மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசனுக்கும் நபீலா என்பவருக்கும் கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

tr

நேற்று ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், “என்னுடைய இளைய மகன் திருமணத்தைப் பொறுத்தவரையில், நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் கிடையாது. ‘மதங்களைப் பார்க்க மாட்டேன்’ என்று சினிமாவில் மட்டும் சொல்றவன் டி.ராஜேந்தர் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, என் மகன் மனதுக்குப் பிடித்திருக்கிறதா கல்யாணம் செய்துகொள். உனக்கு ஓகே என்றால், எனக்கும் சம்மதம். ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடியவன் நான்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5ad372e8-fcef-4701-9bb5-d775f3916723" height="187" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_13.jpg" width="419" />

Advertisment

தாய் தந்தைகள், தங்கள் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர், ஆளாக்குகின்றனர். ஆனால், கல்யாணம் என்று வரும்போது, அப்பா அம்மா விருப்பப்படிதான் பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இது என்னுடைய கருத்து. பிள்ளைகள் ஆசைப்பட்டால் துணி வாங்கித் தருகிறோம், பொம்மை வாங்கித் தருகிறோம், பைக் வாங்கித் தருகிறோம். அதேபோல், கல்யாணத்திலும் பிள்ளைகளின் உணர்வை மதிக்கக்கூடிய தாய்- தந்தையாக எல்லோரும் இருக்க வேண்டும். ஆனால், அப்படி எல்லோருமே இருக்க முடியாது. ஒவ்வொரு தாய் தந்தைக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும், நல்ல தாய் தந்தையாக இருப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.